நாட்டுக்கோழி மாமிசத்தின் மகத்துவம்
நாட்டுக்கோழி வளர்ப்பு என்பது நம் தமிழ் மக்கள் மட்டுமல்லாது உலகின் எல்லா விதமான மக்களும் விரும்பி வளர்த்து வந்திருக்கிறார்கள். இதை ஏன்? நம் முன்னோா் காலத்திலிருந்து தொன்றுத்தொட்டு கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள் என்றால், நாட்டுக்கோழியின் மாமிசத்தில் உள்ள சிறப்பே அதற்கு காரணமாகும் என்றுதான் சொல்ல வேண்டும். நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே நாட்டுக்கோழியில் உள்ள மகத்துவத்தை அறிந்தே அதை வீட்டிலேயே வளர்த்து தம் மாமிசத்தின் தேவையை பூர்த்தி செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தை எடுத்துக்கொண்டால், அதற்கு மாற்று வழியான பிராய்லர் என்ற உடம்பிற்கு கேடு வளைவிற்கும் மாமிசத்தை உட்கொன்டு மனிதர்கள் மருத்துவமணைகளை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். உன்மையில் சொல்லபோனால் பிராய்லர் கோழியின் வளர்ப்பு முறையை மக்கள் தெரிந்துக்கொண்டிருந்தால் பிராய்லர் மாமிசத்தை மக்கள் இந்நேரம் நிராகரித்திருப்பார்கள், அதை இன்னும் மக்கள் ஏன்? செய்யவில்லை என்றால் பிராய்லர் மாமிசத்தின் தவறான ஊக்குவிப்புதான், பிராய்லர் மாமிசத்தில் அதிகபடியான புரோட்டின் இருக்கிறது என்ற தவறான ஊக்குவிப்புதான் இதற...