நாட்டுக்கோழி மாமிசத்தின் மகத்துவம்
நாட்டுக்கோழி வளர்ப்பு என்பது நம் தமிழ் மக்கள் மட்டுமல்லாது உலகின் எல்லா விதமான மக்களும் விரும்பி வளர்த்து வந்திருக்கிறார்கள். இதை ஏன்? நம் முன்னோா் காலத்திலிருந்து தொன்றுத்தொட்டு கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள் என்றால், நாட்டுக்கோழியின் மாமிசத்தில் உள்ள சிறப்பே அதற்கு காரணமாகும் என்றுதான் சொல்ல வேண்டும். நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே நாட்டுக்கோழியில் உள்ள மகத்துவத்தை அறிந்தே அதை வீட்டிலேயே வளர்த்து தம் மாமிசத்தின் தேவையை பூர்த்தி செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தை எடுத்துக்கொண்டால், அதற்கு மாற்று வழியான பிராய்லர் என்ற உடம்பிற்கு கேடு வளைவிற்கும் மாமிசத்தை உட்கொன்டு மனிதர்கள் மருத்துவமணைகளை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். உன்மையில் சொல்லபோனால் பிராய்லர் கோழியின் வளர்ப்பு முறையை மக்கள் தெரிந்துக்கொண்டிருந்தால் பிராய்லர் மாமிசத்தை மக்கள் இந்நேரம் நிராகரித்திருப்பார்கள், அதை இன்னும் மக்கள் ஏன்? செய்யவில்லை என்றால் பிராய்லர் மாமிசத்தின் தவறான ஊக்குவிப்புதான், பிராய்லர் மாமிசத்தில் அதிகபடியான புரோட்டின் இருக்கிறது என்ற தவறான ஊக்குவிப்புதான் இதற்கு காரணமாக சொல்ல முடியும். உன்மையில் அப்படியொனறு இதில் கிடையாது. பிராய்லர் மாமிசத்தை உட்கொண்டால் மென்மையாக இருக்கிறது. எளிதில் சீரணம் ஆகிறது. என்றெல்லாம் நாம்மால் எண்ண தோன்றுகிறது. உண்ணுவதற்கு எளிதாக இருந்தாலும், அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்து பார்த்தால் கடினமாகதான் இருக்கிறது. குறைந்த வயதிலேயே பெண்கள் பூப்படைதலை எடுத்துகாட்டாக கூறலாம். மேலும் பலவிதமான புற்று நோய்களுக்கும் இது வழிகாட்டுதலாக இருக்கிறது. அதிக கெட்ட கொழுப்பு உடம்பில் சேர்ந்து இதய நோய் வர காரணமாகவும் இருக்கிறது. மேலும் இதைப்பற்றி கூற வேண்டுமென்றால், மனித சமுதாயத்தையே காலபோக்கில் அழிக்கும் நோக்கில்தான் இருக்கிறது. எனவே இனியாவது மக்கள் இதை உனர்ந்து பிராய்லர் மாமிசத்தை தவிர்த்து நம் முன்னோர்கள் காலம் காலமாக உண்டு வந்த நாட்டுக்கோழியின் மாமிசத்தை உண்டு உடல் ஆரோக்கியமாக வாழவேண்டும். நாட்டுக்கோழியில் எல்லாவிதமான சத்துகளும் அடங்கிருக்கிறது. குறிப்பாக இதய நோயாளிகள் விரும்பி உண்ணும் உணவாக விலங்குகிறது. மேலும் கொழுப்பற்ற மாமிசமாகவும் திகழ்கிறது. பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழைந்தைகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது. கிராமங்களில் திருவிழா என்றால் பொங்கள் வைத்து நாட்டுக்கோழியை அருத்து சாமிக்கு படைத்து விட்டு குழம்பு வைத்து கிராம மக்கள் ஒன்று கூடி உணவுண்ணுவது இன்றும் நம்மால் கானமுடிகிறது. எனவே இனியாவது மக்கள் பிராய்லர் மாமிசத்தை உண்பதை தவிர்த்துவிட்டு நாட்டுக்கோழி மாமிசத்தை உண்ண வேண்டுமென்பது என்னுடைய தலையாய வேண்டுக்கோளாகும்.
இப்படிக்கு
இரிமல்மணி
மேலும் உங்கள் கருத்துகளை வரவேற்க்கிறேன். என்னுடைய மின்னஞ்சல்: anudharashree@gmail.com
எங்களிடம் எல்லாவிதமான நாட்டுக்கோழிகள் மற்றும் நாட்டுக்கோழி முட்டைகள் எங்களிடம் கிடைக்கும் எனது கைபேசி எண்: 9003168152, 9444256933. வேப்பம்பட்டு, திருவள்ளூர் மாவட்டம்.
Comments
Post a Comment