வாழ்க்கை சிறக்க!

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்! சாதனையாளர்கள் மற்றவர்களை விட தங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தங்களின் மன நிலைகளை சரியான முறைகளில் தக்க வைத்து கொள்வது மட்டுமல்லாமல், தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதனை திறம்பட வெளிப்படுத்துகின்றனர். சாதனையாளர்களிடமிருந்து கவனிக்கப்பட்ட 8 பழக்கங்களை இங்கே பார்ப்போம். அந்த பழக்கங்களை நாமும் கற்றுக்கொண்டு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வோம். 1) ஃபோகஸ்; கவனத்தை சிதறவிடக்கூடாது சாதனையாளர்கள் தங்களின் கவனத்தை சிதறவிடமாட்டர்கள். ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினை மட்டும் தான் பார்ப்பார்கள். ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை பார்ப்பது மன அழுத்தத்திற்கு பெரிய காரணமாக அமைகிறது. அதனால் மற்ற பிரச்சனைகளை பிறகு பார்த்துக்கொள்வதுதான் நல்லது. எனவே நீங்கள் நிகழ்கால பிரச்சனைகளை மட்டும் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள், கடந்த காலம் மற்றும் எதிர்கால பிரச்சனைகளை யோசித்து கவலைக்கொள்ளாதீர்கள். இதுவே மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழி ஆகும்! 2) பிரச்சனைகளை பார்த்து கவலை வேண்டாம்; நமது செயல்களில் ஏதேனும் தவறு ஏற்படும் என்று நினைத்தால் அதற்கான முன்னெச்சரிக்கை ந...