Posts

Showing posts from June, 2017

வாழ்க்கையில் வெற்றி பெற 15 படிகட்டுகள்

Image
பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்தை பிடித்ததாக மாற்றிக் கொள்ளுங்கள். விரைவில் நீங்களே ஒரு மாற்றத்தை உணர்வீர்கள். - வாழ்க்கையில் எதற்கும் பயப்படாதீர்கள். வேலை பாதுகாப்பு என்பதை கருதி ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். புதிய முயற்சிகளால் மட்டுமே முன்னேற்றத்தை உணர முடியும். - மற்றவர்களையும் உங்களுக்காக உழைக்க வைக்கும் புத்திசாலித்தனம் இருந்தால் மட்டுமே நல்ல ஒரு leader ஆகா முடியும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். - கீழே விழுவது வேகமாக எழுவதற்காகவே, அதனால் விழுவதைப்பற்றி கவலை படாதீர்கள். அது வெற்றியின் ஏணிப்படி என்பதை நினைவில் கொள்ளுங்கள். - வெற்றிக்கு நேரம் அவசியம் என்பதால், நேரத்தை உருப்படியாக செலவிட தெரிந்து கொள்ளுங்கள். - எதற்கும் கவலை படுவதை விட்டு விட்டு எப்பொழுதும் பாசிடிவ் எண்ணங்களுடன் இருங்கள். - வெற்றிக்கான முதல் சாவி உழைப்பு தான். அதனால் தினமும் குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் உழையுங்கள். - முடியாது, கஷ்டம், நடக்காது போன்ற சொற்களை உங்கள் அகராதியில் இருந்து தூக்கி எறியுங்கள். - வாய்ப்புக்களை தவற விடாதீர்கள். சரியான நேரத்தில் நன்ற

கூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு

Image
நாட்டுக்கோழி வளர்ப்பு கிராமப்புற மக்களின் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. நிலமற்ற மற்றும் சிறு விவசாயிகளுக்கு நாட்டுக்கோழிகள் நடமாடும் வங்கிகளாக செயல்பட்டு குடும்ப வருமானத்தை உயர்த்துவது மட்டுமின்றி அவர்களின் குடும்பத்துக்கு தேவையான புரதத் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. மேலும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டவும் சிறந்த சுய வேலை வாய்ப்பு தொழிலாகவும் உள்ளது. கறிக்கோழியின் விலையை விட நாட்டுக்கோழி இறைச்சியின் விலை அதிகமாக இருந்த போதிலும் நாட்டுக்கோழி இறைச்சி உண்ணும் பழக்கம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. குறைந்த கொழுப்பு சத்து உள்ள ருசியான இறைச்சியே இதற்க்கு காரணம். புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழி வளர்ப்பு கிராம மக்களின் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகவே கருதப்படுகிறது. நாட்டுக்கோழிகள் எவ்வகையான சூழ்நிலையிலும் வளரக்கூடிய திறன் கொண்டவை. நம்நாட்டில் ஏறத்தாழ 20 க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி இனங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் அவற்றின் மூதாதையரான செந்நிற நாட்டுக்கோழிகள் வம்சாவளி வந்தவை. நாட்டுக்கோழிகளில் அசீல்,

வாழ்க்கை ஒரு போராட்டம்

Image
வாழ்க்கை ஒரு போராட்டம் ! போராட்டத்தைச் சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது . நாம் பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துகொண்டே தான் இருக்கிறது . ஏன் நாம் பிறப்பதே ஒரு போராட்டம் தானே . லட்சக்கணக்கான விந்தணுக்களுடன் சண்டையிட்டு , போராடி தான் நமக்கான இருப்பை , பிறப்பை உறுதி செய்துள்ளோம் .போராட்டத்தில் பிறந்து , போராட்டத்தில் வளர்ந்து , போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை . நாம் இன்று போராட்டமே  இல்லாத வாழ்க்கையை மட்டுமே வாழ நினைக்கிறோம் . இது எப்போதும் சாத்தியமில்லை . பிறப்பதற்கே  லட்சக்கணக்கான அணுக்களை வென்ற நம்மால் வாழ்வதற்கான  போராட்டத்தில் வெல்ல முடியாதா என்ன ?! வீதியில் நின்று போராடுவதும் , நாட்டுக்காக போராடுவதும் மட்டும் போராட்டம்   அல்ல . உயிர் வாழ்வதற்கான போராட்டம் தான் உண்மையான போராட்டம் . இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் .கடந்த வாரம் Discovery யில் ஒரு நிகழ்வை ஒளிபரப்பினார்கள் . அலாஸ்காவில் வாழும் பனிக்கரடிகளையும் , சாலமன் மீன்களைப் பற்றிய ஒளிபரப்பு அது . பனி காலம் முடிந்த நிலையில் தங்களுக்கு வேண்டிய ( பிடித்தமான ) உணவைப்பெற நதிக்கரைக்கு வருகின்றன கரடி