Posts

Showing posts from June 28, 2017

நாட்டுக் கோழி வளர்ப்பு முறை

Image
நாட்டுக் கோழி வளர்ப்பு முறை CONTENTS 1. நாட்டுக் கோழி வளர்ப்பு 2. வளர்க்கும் முறைகள் 3. பராமரிப்பு முறைகள் 4. வளர்ப்பது எப்படி? 5. நாட்டுக் கோழிகளின் வகைகள் 6. இனப் பெருக்கம் 7. முட்டையிடுதல் 8. அடை கட்டுதல் 9. தீவனம் 10. நோய்த் தடுப்பு 11. முதலீடு நாட்டுக் கோழி வளர்ப்பு வளர்க்கும் முறைகள் பராமரிப்பு முறைகள் வளர்ப்பது எப்படி? நாட்டுக் கோழிகளின் வகைகள் இனப் பெருக்கம் முட்டையிடுதல் அடை கட்டுதல் தீவனம் நோய்த் தடுப்பு முதலீடு வீடுகளில் இருந்தபடியே நாட்டுக் கோழியை நல்ல முறையில் வளர்த்துப் பராமரித்து அதிகப் பயன் பெறலாம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தங்களது வீடுகளுக்கு தேவையான கோழி முட்டை, இறைச்சி ஆகியவை கிடைத்து வந்தன. மேலும், தனது தேவைக்கு மேல் உள்ள கோழிகளை விற்றும் பணம் சம்பாதித்து வந்தனர். ஆனால், நாளடைவில் கிராமப்புறங்களில் கோழி வளர்ப்பு மறைந்து வருகிறது. குறைந்த முதலீட்டிலும், குறைந்த பராமரிப்பிலும் அதிக பலன் தரும் தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு உள்ளது. எனவே