Posts

Showing posts from March, 2015

வெற்றி

Image
அன்று கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி. இந்தியாவின் கவுரவமே அப்போட்டியில் ஜெயிப்பதில் தான் இருப்பது போல் கோடிக்கணக்கான மனசுகளில் அன்று அளவு கடந்த பரபரப்பு. அத்தனை கண்களும் பந்துகளில் பின்னால் ஓட்டம் எடுக்க, மனதில் தடக் தடக். சிறிது நேரத்தில் தோல்வி பயம் கவ்விக்கொள்ள அந்தத் தோல்வியை எதிர்கொள்ள முடியாத பலரும், ஆட்டம் முடிவதற்கு முன்பே பார்ப்பதை நிறுத்திக் கொண்டனர். அடுத்த முறை வெற்றி அடைவோம் என்ற கண்ணீர்த்துளிகள் வாட்ஸ் அப்பில் பறந்தன. கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதற்காக நாளைக்கு யாரும் தற்கொலை முயற்சியில் இறங்கி விடக் கூடாதே என பல மனங்களில் பதைபதைப்பு...இதற்கு இடையில் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வீட்டின் முன்பு துணை ராணுவப்படை பாதுகாப்பு...ஆம் தோல்வி எப்படி வேண்டுமானாலும் தன்னை வெளிப்படுத்தும். கோபத்தின் உச்சத்தையும் எட்டும்...மரணத்திலும் தள்ளும். தோல்வியைக் கையாளப் பழகுவதும், வெற்றிக்கான அடிப்படையே என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாழ்வின் முன் பாதியில் பல்வேறு கஷ்டங்களையும், தோல்விகளையும் பார்த்துப் பழகிய பலர், அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தை அடுத்த அத்தியாயத்தில் பயன்படுத்தி

வாழ்க்கை சிறக்க!

Image
மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்! சாதனையாளர்கள் மற்றவர்களை விட தங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தங்களின் மன நிலைகளை சரியான முறைகளில் தக்க வைத்து கொள்வது மட்டுமல்லாமல், தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதனை திறம்பட வெளிப்படுத்துகின்றனர். சாதனையாளர்களிடமிருந்து கவனிக்கப்பட்ட 8 பழக்கங்களை இங்கே பார்ப்போம். அந்த பழக்கங்களை நாமும் கற்றுக்கொண்டு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வோம். 1) ஃபோகஸ்; கவனத்தை சிதறவிடக்கூடாது சாதனையாளர்கள் தங்களின் கவனத்தை சிதறவிடமாட்டர்கள். ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினை மட்டும் தான் பார்ப்பார்கள். ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை பார்ப்பது மன அழுத்தத்திற்கு பெரிய காரணமாக அமைகிறது. அதனால் மற்ற பிரச்சனைகளை பிறகு பார்த்துக்கொள்வதுதான் நல்லது. எனவே நீங்கள் நிகழ்கால பிரச்சனைகளை மட்டும் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள், கடந்த காலம் மற்றும் எதிர்கால பிரச்சனைகளை யோசித்து கவலைக்கொள்ளாதீர்கள். இதுவே மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழி ஆகும்! 2) பிரச்சனைகளை பார்த்து கவலை வேண்டாம்; நமது செயல்களில் ஏதேனும் தவறு ஏற்படும் என்று நினைத்தால் அதற்கான முன்னெச்சரிக்கை ந