வெற்றி

அன்று கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி. இந்தியாவின் கவுரவமே அப்போட்டியில் ஜெயிப்பதில் தான் இருப்பது போல் கோடிக்கணக்கான மனசுகளில் அன்று அளவு கடந்த பரபரப்பு. அத்தனை கண்களும் பந்துகளில் பின்னால் ஓட்டம் எடுக்க, மனதில் தடக் தடக். சிறிது நேரத்தில் தோல்வி பயம் கவ்விக்கொள்ள அந்தத் தோல்வியை எதிர்கொள்ள முடியாத பலரும், ஆட்டம் முடிவதற்கு முன்பே பார்ப்பதை நிறுத்திக் கொண்டனர். அடுத்த முறை வெற்றி அடைவோம் என்ற கண்ணீர்த்துளிகள் வாட்ஸ் அப்பில் பறந்தன. கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதற்காக நாளைக்கு யாரும் தற்கொலை முயற்சியில் இறங்கி விடக் கூடாதே என பல மனங்களில் பதைபதைப்பு...இதற்கு இடையில் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வீட்டின் முன்பு துணை ராணுவப்படை பாதுகாப்பு...ஆம் தோல்வி எப்படி வேண்டுமானாலும் தன்னை வெளிப்படுத்தும். கோபத்தின் உச்சத்தையும் எட்டும்...மரணத்திலும் தள்ளும். தோல்வியைக் கையாளப் பழகுவதும், வெற்றிக்கான அடிப்படையே என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாழ்வின் முன் பாதியில் பல்வேறு கஷ்டங்களையும், தோல்விகளையும் பார்த்துப் பழகிய பலர், அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தை அடுத்த அத்தியாயத்தில் பயன்படுத்தி ...